எப்.ஏ.கிண்ணம்: டோட்டன்ஹாம் வீழ்ந்தது!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
எப்.ஏ.கிண்ணம்: டோட்டன்ஹாம் வீழ்ந்தது!

லண்டன், பிப்.22-

இங்கிலீஷ் எப்.ஏ. கிண்ண கால்பந்து போட்டியில், வலுவான டோட்டன்ஹாம் குழுவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்குள் கிறிஸ்டல் பேலஸ் குழு நுழைந்தது.

கிறிஸ்டல் பேலசின் தற்காப்பு ஆட்டக்காரரான மார்ட்டின் கெல்லி, முற்பகுதி ஆட்டம் முடிய சில வினாடிகள் இருக்கும் போது அந்த வெற்றிக் கோலை போட்டார்.

 

பிற்பகுதி ஆட்டத்தின் போது  இடைவிடாத தாக்குதல்களை டோட்டன்ஹான் நடத்தியது என்றாலும் கடைசி வரையில் ஆட்டத்தை சமன் செய்ய இயலவில்லை.

மூலக்கதை