வடமாகாண போக்குவரத்து அமைச்சால் 4 வஸ் தரிப்பிடங்கள் அமைப்பு

கதிரவன்  கதிரவன்
வடமாகாண போக்குவரத்து அமைச்சால் 4 வஸ் தரிப்பிடங்கள் அமைப்பு

வடமாகாண போக்குவரத்து அமைச்சினால் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கென நான்கு பேருந்து தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக விடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் முல்லைத்தீவு பரந்தன் வீதியில் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒரு பேருந்து தரிப்பிடமும் முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் முள்ளியவளை பகுதியில் ஒரு பேருந்து தரிப்பிடமும் மாங்குளம் மல்லாவி வீதியில் செல்வராணி குடியிருப்பு பகுதியில் ஒரு பேருந்து தரிப்பிடமும் கண்டி வீதியில் பனிக்கன்குளம் பகுதியில் ஒரு பேருந்து தரிப்பிடமுமாக நான்கு பேருந்து தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக விடப்பட்டுள்ளது.

இதனால் பாடசாலை மாணவர்கள் மக்கள் பெரிதும் நன்மையடைவதாகவும் வடமாகாண போக்குவரத்த அமைச்சர் மற்றும் இதனை அமைக்க பாடுபட்டவர்களுக்கும் தமது நன்றிகளை கூறுவதாகவும் தெரிவிக்கின்றனர்

2016-01-28

மூலக்கதை