அஸ்வின், ஜனனி நடிக்கும் தொல்லைக்காட்சி

தினகரன்  தினகரன்
அஸ்வின், ஜனனி நடிக்கும் தொல்லைக்காட்சி

சென்னை, : கயலாலயா நிறுவனம் மூலம் பாலா செந்தில் ராஜா தயாரிக்கும் படம், ‘தொல்லைக்காட்சி’. இதில் அஸ்வின் ஹீரோவாக நடிக்கிறார். ஜனனி ஐயர் ஹீரோயின். மற்றும் மனோபாலா, மயில்சாமி, சுப்பு பஞ்சு, ஆதவன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதை ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமியிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய எம்.சாதிக்கான் இயக்குகிறார். தரண் இசை அமைக்கிறார். ரகுராம் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நடந்து வருகிறது.படம் பற்றி இயக்குனர் சாதிக் கூறும்போது, ‘மக்களிடம் டி.வி, என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தி  இருக்கிறது. அதன் தாக்கம் எப்படி இருக்கிறது என்பதை கிராமத்து பின்னணியில் நகைச்சுவையாகச் சொல்கிறேன். அதோடு ஆசைப்பட்ட பொருளை கடனுக்கு வாங்கிவிட்டு அந்த கடனால் வாழ்க்கையை எப்படி தொலைக்கிறோம் என்பதையும் காமெடியாக சொல்லும் படம் இது’ என்றார்.

மூலக்கதை