நகரியில் சுரங்கப்பாதைகள் அமைத்து தரக்கோரி தெற்கு ரெயில்வே பொது மேலாளரிடம், நடிகை ரோஜா மனு
நடிகை ரோஜா ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர். இவர் தனது தொகுதி மேம்பாட்டு பணிகளுக்கு அதிகாரிகளை அடிக்கடி சந்தித்து மனு கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே உள்ள தெற்கு ரெயில்வே பொது மேலாளர் அலுவலகத்திற்கு நேற்று மாலை நடிகை ரோஜா ‘திடீர்’ என வந்தார். தனது தொகுதி சார்பாக அங்கு பொது மேலாளர் வஷிஷ்டா ஜோஹ்ரியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நகரி தொகுதியில் ரெயில்வே மேம்பாட்டு பணிக்காக ஏற்கனவே 2 முறை மனு கொடுத்திருக்கிறேன். அதில் 65 சதவீத பணிகள் நடந்துள்ளன. நகரியில் ஏகாம்பரம்குப்பம் பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டும், இன்று வரை பணிகள் தொடங்கவில்லை. அதேபோல புத்தூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகிலேயே தண்டவாளங்கள் உள்ளது. அங்கு விபத்துகள் மூலம் ஏராளமானோர் உயிரிழந்து உள்ளனர். எனவே அங்கும் ஒரு சுரங்கப்பாதை ஏற்படுத்தி தரக்கோரி மனு அளித்திருக்கிறோம். எங்கள் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமேலாளர் வாக்குறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
2016-01-28



சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
