எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக இணையதளம் முடக்கம் ?

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக இணையதளம் முடக்கம் ?

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக இணையதளம் தற்போது முடக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய எஸ்.வி.எஸ். மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி அளித்த தகவலும், இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த தகவலும் முன்னுக்குப்பின் முரணாக இருந்தது. 

அதாவது, துணைவேந்தர் கீதா செய்தியாளர்களிடம் தெரிவித்த போது 2008 ஆம் ஆண்டே எஸ்விஎஸ் மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாக கூறினார்.

ஆனால், 2008 ஆம் ஆண்டு அங்கீகாரம் வழங்கப்பட்ட பட்டியலில் எஸ்விஎஸ் மருத்துவ கல்லூரி இருந்தது.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட பட்டியலிலும்  எஸ்விஎஸ் மருத்துவ கல்லூரி இடம்பெற்றிருந்தது.

இது தொடர்பாக நியூஸ்7 தமிழ் ஆதாரத்தோடு செய்திகளை வெளியிட்டது. ( http://bit.ly/SVSCollege-MGRUniversity )

சர்ச்சைக்குரிய கல்லூரிக்கு பல்கலைக்கழகம் துணைபோகிறதா என்ற கேள்வியையும் நியூஸ்7 தமிழ் கேள்வி எழுப்பியது.

இந்நிலையில், பல்கலைக்கழக இணையதளம் முழுவதுமாக முடக்கப்பட்டு, அனைத்து தகவலும் அழிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் விளக்கம் கேட்க முயற்சித்து வருகிறோம்.

மேலும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, உடனுக்குடன் பதியப் படும்.

 

மூலக்கதை