சங்கங்களிடம் விவரம் பெற்றுஅனைத்து கட்டுமான தொழிலாளரையும் பிஎப் திட்டத்தில் சேர்க்க வேண்டும்: ஒரு வாரத்தில் அறிக்கை தர உத்தரவு

தினகரன்  தினகரன்
சங்கங்களிடம் விவரம் பெற்றுஅனைத்து கட்டுமான தொழிலாளரையும் பிஎப் திட்டத்தில் சேர்க்க வேண்டும்: ஒரு வாரத்தில் அறிக்கை தர உத்தரவு

சங்கங்களிடம் விவரம் பெற்று

00:18:47Thursday2016-01-28

புதுடெல்லி: கட்டுமான தொழிலாளர்களையும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎப்) திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று பிஎப் நிறுவனம்  உத்தரவிட்டுள்ளது. நாட்டில் அதிக வேலைவாய்ப்பு கொண்ட துறைகளில் கட்டுமானத்துறை இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில்  விவசாய துறை உள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர்கள்தான் இதில் அதிகம். இவர்களின் எண்ணிக்கை இத்துறையில் சுமார் 89 சதவீதம் உள்ளது.  இந்த நிலையில் இவர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேர்க்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (பிஎப்)  தீவிரம் காட்டி வருகிறது.

இதுகுறித்து பிஎப் நிறுவனம் மண்டல அலுவலகங்களுக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அமைப்பு சாரா தொழிலாளர்கள்  அதிகம் கொண்ட துறைகளில் உள்ள தொழிலாளர்களை பிஎப் திட்டத்தில் சேர்ப்பது தொடர்பாக மத்திய அரசு முனைப்பு கொண்டுள்ளது. இது  தொடர்பான நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறது. இந்த வகையில், கட்டுமான தொழிலாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அவர்கள்  அனைவரையும் பிஎப் திட்டத்தில் சேர்ப்பது மிகுந்த அவசியம் வாய்ந்தது. எனவே, அந்தந்த மாநிலங்களில் உள்ள அனைத்து தொழிலாளர் சங்கங்கள்,  கட்டுமானத்துறை சார்ந்த அமைப்புகள், கட்டுமான தொழிலாளர் நல அமைப்புகளுடன் இணைந்து, உரிய விவரங்களை பெற்று ஆவன செய்ய  வேண்டும்.

இவர்களை பிஎப் திட்டத்தில் சேர்த்து நிரந்தர கணக்கு எண் வழங்க வேண்டும். இதுதொடர்பான நடவடிக்கைகள் எந்த அளவு எடுக்கப்பட்டுள்ளது,  எவ்வளவு தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது பற்றிய விவரங்களை இன்னும் ஒரு வாரத்தில் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க  வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

செயல்படாத கணக்குகளில் ரூ.27,000 கோடி

தேசிய அளவில் 2011-12ல் எடுக்கப்பட்ட ஆய்வின்படி சுமார் 5.02 கோடி கட்டுமான துறை சார்ந்த தொழிலாளர்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.  இவர்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களும் அடங்குவர். பொதுவாகவே, கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்  ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்துக்கு வேலை நிமித்தமாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.

எனவே, பிஎப் நிறுவனம் இந்த தொழிலாளர்களுக்காவே இரண்டு துணை குழுக்கள் அமைத்து ஆராய உத்தரவிட்டிருந்தது. தொழிலாளர் நல  அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி, கட்டுமான துறை சார்ந்த தொழிலாளர்களின் பிஎப் பணம் 27,000 கோடிக்கும் மேல் உரிமை  கோரப்படாமலும், செயல்படாமலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை