சஸ்கட்சுவான் பாடசாலை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு பெருமளவான மக்கள் அஞ்சலி!

CANADA MIRROR  CANADA MIRROR
சஸ்கட்சுவான் பாடசாலை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு பெருமளவான மக்கள் அஞ்சலி!

கனடா சஸ்கட்சுவான் பாடசாலை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் நினைவாக கடந்த (ஞாயிற்றுக்கிழமை) தேவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் லா லோச்சே பகுதியைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 600 பேர் வரை கலந்து கொண்டனர்.

சஸ்கட்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள லா லோச்சே பகுதி பாடசாலை ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை ஆயதங்களுடன் நுழைந்த சந்தேகநபர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி பிரயோகத்தில் பாடசாலை ஆசியர்கள் இருவர் கொல்லப்பட்டனர். அத்துடன் சகோதரர்கள் இருவரும் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் துன்பகரமானது என்பதுடன் மிகவும் ஆபத்தானது என தெரிவித்துள்ள கனேடிய அரசு சம்பவத்திற்கு கண்டனமும் வெளியிட்டுள்ளது. அத்துடன் சந்தேக நபரான 17 வயது சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.
இந்த நிலையி;ல் சம்பவத்தில் உயிரிழந்த நால்வரதும் நினைவாக தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் அப் பிரதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தமது அஞ்சலிகளை தெரிவித்துள்ளனர்.

இதன்போது வரிசைகளில் காத்திருந்த மக்கள் மெழுகுச் சுவாலைகள் ஏற்றி வைத்து கண்ணீர் மல்க அஞ்சலியை செலுத்தினர்.

170 total views, 170 views today

மூலக்கதை