ரஜினிக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து!

நக்கீரன்  நக்கீரன்
ரஜினிக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து!

ரஜினிக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து!

த்ம விபூஷண் விருது பெற்ற ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


‘‘பல வருட உழைப்பு கடின முயற்சிக்கு பிறகு தினம் தினம் செய்திகளாக மாறி நிற்கும் அளவிற்கு வளர்ந்து விட்ட ரஜினிகாந்துக்கு மக்கள் தந்த வெற்றியும் விருதுகளுமே அங்கீகாரமாகும். இது வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு மட்டுமல்ல வளர்ந்து நிற்கும் கலைஞர்களுக்கும் பொருந்தும். அதோடு திரை உலக பாராட்டுகளையும் விருதுகளையும் தாண்டி சமூக அங்கீகாரம் கிடைக்கும்போதுதான் அந்த கலைஞன் உச்சம் பெறுகிறார். 

அந்த வகையில் உலக தமிழர்களும் இந்தியர்களும் சூப்பர் ஸ்டார் என கொண்டாடும் கலைஞராக உள்ள ரஜினிகாந்த் இந்திய அரசின் உயரிய பத்ம விபூஷண் விருதை பெறுவதில் தென்னிந்திய நடிகர் சங்கம் பெருமிதம் கொள்கிறது. காலம் தன்னிடம் உள்ள அருட்கொடைகள் அனைத்தையும் கொடுத்து அவரை ஆசீர்வதிக்கட்டும். இவ்வாறு அறிக்கையில் குறிப்படப்பட்டு உள்ளது.

மூலக்கதை