கடலை எண்ணெய் விலை சரிவு : நிலக்கடலை விலை உயர்வு

தினகரன்  தினகரன்
கடலை எண்ணெய் விலை சரிவு : நிலக்கடலை விலை உயர்வு

01:37:38Sunday2016-01-24

விருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில் வத்தல் குவிண்டாலுக்கு ரூ.500, மல்லி மூடைக்கு ரூ.400, கடலை எண்ணெய் டின்னுக்கு ரூ.30 சரிந்துள்ளது. நிலக்கடலை பருப்பு மூடைக்கு ரூ.100, கடலைப் புண்ணாக்கு மூடைக்கு ரூ.300 உயர்ந்துள்ளது. நிலக்கடலை பருப்பு (80 கிலோ) மூடைக்கு ரூ.100 உயர்ந்ததால், கடலைப் புண்ணாக்கு (100 கிலோ) மூடைக்கு ரூ.300 உயர்ந்துள்ளது. கடலை எண்ணெய் (15 கிலோ) டின்னுக்கு ரூ.30 விலை குறைந்துள்ளது. ராஜஸ்தானில் இருந்து மல்லி வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் மல்லி (40 கிலோ) மூடைக்கு ரூ.400 சரிந்துள்ளது. ஆந்திரா குண்டூர் வத்தல் மார்க்கெட்டிற்கு தினசரி 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் மூடை வரை வரத்து உள்ளது. இதனால் புது வத்தல் குவிண்டால் ரூ.8,500 முதல் ரூ.11,000 வரை விற்பனையாகிறது. ஏசி குடோன்களில் இருந்து எடுக்கப்படும் வத்தல் குவிண்டாலுக்கு கடந்த வாரம் ரூ.1,000 குறைந்த நிலையில் மேலும் ரூ.500 சரிந்துள்ளது. வட மாநிலங்களில் இருந்து கடுகு, சீரகம், சோம்பு, வெந்தயம், மொச்சை, கொண்டக்கடலை, வெள்ளை கொண்டக்கடலை வரத்து அதிகரித்து வருவதால் அவற்றின் விலையும் குறைந்து வருகிறது.

மூலக்கதை