நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவர் கைது (PHOTOS)
திருப்பூரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது 40). லாரி டிரைவர். இவரது மனைவி பஞ்சவர்ணம்(35). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் தேனியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகின்றனர். லாரி டிரைவரான ஜெயக்குமார் அடிக்கடி வெளியூருக்கு லாரி ஓட்டிச் செல்வார். அப்போது அங்கிருந்து பஞ்ச வர்ணத்துக்கு போன் செய்வார். அவர் போன் செய்யும் போதெல்லாம் அவருக்கு இணைப்பு கிடைப்பதில்லை. ‘பிசியாக உள்ளார்’ என்பதே பதிலாக கிடைத்தது. இது பஞ்சவர்ணத்தின் நடத்தையில் ஜெயக்குமாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அத்தி பூத்தாற்போல் எப்போதாவது போன் இணைப்பு கிடைத்த போது ஜெயக்குமார் மிகவும் ஆவேசமாக ‘இவ்வளவு நேரம் எவனுடன் பேசிக் கொண்டிருந்தாய்?’ என்று கேட்டிருக்கிறார். இதனால் கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் ஜெயக்குமார் நேற்று இரவு தனது அண்ணனின் நினைவு நாளை வீட்டில் அனுசரித்தார். அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து வணங்கினார். இது பஞ்சவர்ணத்துக்கு பிடிக்கவில்லை. படத்துக்கு அணிந்திருந்த மாலையை கழற்றி வீசியதோடு படத்தையும் உடைத்தார். இதனால் ஜெயக்குமார் மிகவும் ஆத்திரமானார். ஏன் இப்படிச் செய்தாய்? என்று தட்டிக் கேட்ட போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஜெயக்குமார் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து பஞ்சவர்ணத்தின் மீது ஊற்றி தீ வைத்தார். பின்னர் கதவை வெளியே பூட்டிவிட்டு தப்பிச் சென்றார்.
தீயின் வெம்மை தாங்காது பஞ்சவர்ணம் அலறி துடித்தார். காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பினார். அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்து கதவைத் திறந்தனர். வீட்டுக்குள் குற்றுயிராய் கிடந்த பஞ்சவர்ணத்தை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். என்னும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பஞ்சவர்ணம் பரிதாபமாக இறந்தார்.
பஞ்சவர்ணம் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டது குறித்து அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஜெயக்குமாரை கைது செய்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.
2016-01-22



சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
