கற்பை இழந்த காதலியை கொலை செய்த காதலன்: காட்டிக் கொடுத்த காதலனின் கவிதை

NEWSONEWS  NEWSONEWS
கற்பை இழந்த காதலியை கொலை செய்த காதலன்: காட்டிக் கொடுத்த காதலனின் கவிதை

கடந்த 1987ம் ஆண்டு 21 வயதான லிடியா மச்சி என்ற மாணவி மிலன் பல்கலைக்கழகத்தில் படித்து வந்துள்ளார். இவருடன் ஸ்டேபானோ பிந்தா(தற்போதைய வயது 48) என்ற நபரும் படித்து வந்துள்ளார்.

இருவரும் நண்பர்களாக இருந்தாலும், இருவருக்கும் இடையே ரகசிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், Varese நகருக்கு அருகில் வசித்து வந்த ஸ்டேபானோவை லிடியா சந்திக்க அதே வருடம் ஜனவரி 5ம் திகதி சென்றுள்ளார்.

அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ரகசிய உறவையும் தாண்டி லிடியா ஏற்கனவே கற்பை இழந்துவிட்டதாக ஸ்டோபானோ நம்பியுள்ளார்.

பின்னர், லிடியாவை ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று அங்கு கொடூரமாக கற்பழித்துள்ளார்.

இதையடுத்து, கத்தியால் லிடியாவின் உடலில் 29 இடங்களில் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

இந்த சம்பவத்தில் கொலை வழக்கு பதிவு செய்த பொலிசார் கொலையாளியை கடந்த 30 ஆண்டுகளாக தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் சந்தேகத்தின் அடிப்படையில் லிடியாவின் முன்னாள் கல்லூரி நண்பன் என்ற எண்ணத்தில் ஸ்டோபானோவை பொலிசார் விசாரணை செய்துள்ளனர்.

அப்போது, அவரது வீட்டை ஆய்வு செய்தபோது இரண்டு கடிதங்கள் கிடைத்துள்ளது.

ஒன்றில் ’ On the death of a friend’(உயிரிழந்த தோழிக்கு இரங்கல் கவிதை) என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதி அதனை லிடியாவின் பெற்றோர்களுக்கு அனுப்பியது தெரியவந்துள்ளது.

இரண்டாவது கடிதத்தில், ‘Stefano is a barbaric murderer’(ஸ்டேபானோ ஒரு காட்டுமிராண்டித்தனமான கொலைகாரன்) என எழுதி இருந்துள்ளார்.

இந்த இரண்டு கடிதங்களையும் பொலிசார் ஆய்வுக்கு உட்படுத்தினர். அதாவது, 1987ம் ஆண்டு ஸ்டாபினோ எழுதிய இந்த இரண்டு கடிதங்களிலும் அவரது கையெழுத்து 100 சதவிகிதம் ஒத்து போனது.

இந்த கவிதையை அடிப்படையாக வைத்து விசாரணை செய்தபோது, ஸ்டேபானோ உண்மையை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவரை பொலிசார் நேற்று கைது செய்தனர்.

சுமார் 30 வருடங்களுக்கு பிறகு கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளதுடன் தனது மகளுக்கு நீதி கிடைத்துள்ளதாக லிடியாவின் பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை