விலைமாது பெண்களுடன் விருந்தில் கலந்துக்கொண்ட பிரதமர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

NEWSONEWS  NEWSONEWS
விலைமாது பெண்களுடன் விருந்தில் கலந்துக்கொண்ட பிரதமர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இத்தாலி நாட்டின் பிரதமராக Silvio Berlusconi(79) என்பவர் 2008 முதல் 2011 ஆண்டு வரை பதவி வகித்து வந்துள்ளார்.

பிரதமரின் நெருங்கிய தோழியான ஜேர்மனி நாட்டை சேர்ந்த சபீனா பேகன் என்பவர் பிரதமரின் நன்மதிப்பை பெறுவதற்காக அவருக்கு பல வகைகளில் உதவிகளை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த நவம்பர் 2008ம் ஆண்டு பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற மாபெறும் விருந்தில் அந்நாட்டின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துக்கொண்டுள்ளனர்.

விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற முக்கிய புள்ளிகளை கவரும் வகையில், சபீனா பேகன் 26 விபச்சாரிகளை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

மேலும், பிரதமரின் மதிப்பை பெறுவதற்காக அந்நாட்டை சேர்ந்த Gianpaolo Tarantini என்ற இளம் தொழிலதிபர் ஒருவர் தான் அந்த மாபெறும் விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற விலை மாது பெண்களுக்கு கணிசமான தொகை கிடைத்தது மட்டுமில்லாமல், பிரதமரின் கையால் பல பரிசுகளும் பெற்றுள்ளனர்.

ஆனால், 2009ம் ஆண்டு விலை மாதுக்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேற்பாடு காரணத்தால் பாதிக்கப்பட்ட விலை மாது ஒருவர் பிரதமரின் விருந்து நிகழ்ச்சியில் நடைபெற்ற அனைத்து உண்மைகளையும் வெளியிட்டுள்ளார்.

இந்த தகவல் தொடர்பான விசாரணை பிரதமர் 2011ம் ஆண்டில் பதவியை இழந்ததற்கு பிறகு நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்ற வந்த இந்த விசாரணையின் இறுதி தீர்ப்பை நேற்று நீதிபதிகள் வெளியிட்டுள்ளனர்.

அதில், பிரதமரின் விருந்து நிகழ்ச்சியில் விலை மாதுக்களை அனுமதித்த தொழிலதிபருக்கு 7 வருடங்கள் மற்றும் 10 மாதங்கள் சிறை தண்டனையும், விலை மாதுக்களை தெரிவு செய்து அனுப்பி வைத்த சபீனா பேகனிற்கு 16 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

எனினும், இந்த விவகாரத்தில் இத்தாலியின் முன்னாள் பிரதமருக்கு எந்தவித தொடர்பும் இல்லை என கூறி அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை