நோயாளியை கொண்டு சென்ற அவசரஊர்தி ஓட்டுனருக்கு திடீர் மாரடைப்பு: உயிரை பணயம் வைத்து நிகழ்த்திய அற்புதம்
இத்தாலி நாட்டை சேர்ந்த 91 வயது மூதாட்டி ஒருவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் San Paolo di Civitavecchia மருத்துவமனையை சேர்ந்த அவசரஊர்திக்கு தகவல் அளித்துள்ளார்.
மருத்துவமனையின் சக ஊழியருடன் வந்த Massimiliano Ceci என்ற ஓட்டுனர், நோயாளியை ஏற்றிக்கொண்டு அவசரஊர்தியை இயக்கியுள்ளார்.
அப்போது, ஓட்டுனருக்கும் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்த தனது சக ஊழியரிடம் அதனை தெரிவித்து விட்டு, நோயாளியை குறித்து நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவே நானே வாகனத்தை ஓட்டுகிறேன் என கூறி நெஞ்சு வலியுடன் அவசரஊர்தியை இயக்கியுள்ளார்.
கடுமையான வலியுடன் வாகனத்தை ஓட்டி வந்த அவர், மருத்துவமனையை நெருங்கிய உடன், வாகனத்தை நிறுத்திய அடுத்த கனம் மயங்கி இருக்கையிலே சரிந்துள்ளார்.
இதனை கண்ட சக ஊழியர் மருத்துவமனைக்கு தகவல் அளித்து மூதாட்டியையும், ஓட்டுனரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
கடந்த 27 வருடங்களாக அவசரஊர்தி வாகனங்களை இயக்கி வரும் அந்த நபர், தான் பணிபுரியும் மருத்துவமனையிலேயே ‘ஆஞ்சியோபிளாஸ்ட்டி’ சிகிச்சை மேற்கொண்டு வருகிறார் என்றும் தற்போது அவர் உடல் நிலை முன்னேறி உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய அந்த ஓட்டுனர்,அவசரஊர்தியை இயக்கும்போது தனது இதயத்தில் பலத்த கணத்தை உணர்ந்ததாகவும், இடது பக்க கையில் வலியை உணர்ந்ததாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், மூதாட்டியை மருத்துவமனையில் தக்க நேரத்தில் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த அபாயத்தை ஏற்றதாகவும் தெரிவித்தார்.
தனது பணியில் நேர்மையாகவும், தனது உயிரை பற்றி கவலைப்படாமல் மூதாட்டியை சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்த ஓட்டுனரை மருத்துவமனையின் நிர்வாகும் வெகுவாக பாராட்டியுள்ளது.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
