பொலிஸ் எனக்கூறி 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரன்: பொது இடத்தில் நிகழ்ந்த பயங்கர சம்பவம்

NEWSONEWS  NEWSONEWS
பொலிஸ் எனக்கூறி 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரன்: பொது இடத்தில் நிகழ்ந்த பயங்கர சம்பவம்

ரோம் நகரில் வசித்து வந்த 16 வயது சிறுமி ஒருவர் தனது நண்பன் ஒருவருடன் இசை நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு Prati பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்துக்கொண்டு நின்றுள்ளனர்.

அப்போது, பொலிஸ் உடையில் அங்கு வந்த நபர் ஒருவர், சிறுமியிடம் சில ஆவணங்களை கேட்டுள்ளார்.

அந்த நபர் கேட்ட அனைத்தும் கொடுத்தும் திருப்தி அடையாத அந்த நபர், சிறுமி மீது மேலும் சந்தேகமாக இருக்கிறது என்றும் தன்னுடன் காவல் நிலையம் வர வேண்டும் என கூறியுள்ளான்.

இதனை உண்மை என நம்பிய அந்த சிறுமி தனது நண்பனை பேருந்து நிலையத்திலேயே விட்டுவிட்டு, பொலிஸ் எனக்கூறிய அந்த நபருடன் சென்றுள்ளார்.

சிறுமியை அழைத்துக்கொண்டு சென்ற அந்த நபர், காவல் நிலையம் செல்லாமல் Piazzale Clodio என்ற பகுதியில் இருந்த ஒரு திறந்தவெளி பூங்காவிற்கு சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இந்நிலையில், தனது தோழி அடையாளம் தெரியாத நபருடன் சென்றுள்ளதால் சந்தேகம் அடைந்த நபர், சிறுமியின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவல் பெற்று அலறியடித்துக்கொண்டு பேருந்து நிலையத்திற்கு வந்த பெற்றோர்களின் கண்ணில் பொலிசார் என நாடகமாடிய அந்த நபர் பட, அவனை பிடிக்க துரத்தியுள்ளனர்.

ஆனால், அந்த நபர் அங்கிருந்து தப்பியதால், அவனால் சீரழிக்கப்பட்ட தங்களது மகளை Policlinico Gemelli மருத்துவமனையில் அனுமதித்து விட்டு பொலிசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலை பெற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொலிசார், சிறுமியை பலாத்காரம் செய்த நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மூலக்கதை