ஸ்பெயினின் சாதனையை முறியடித்த இத்தாலி: கின்னஸில் இடம் பிடித்த 1.5 கிலோ மீற்றர் பீட்சா (வீடியோ இணைப்பு)

NEWSONEWS  NEWSONEWS
ஸ்பெயினின் சாதனையை முறியடித்த இத்தாலி: கின்னஸில் இடம் பிடித்த 1.5 கிலோ மீற்றர் பீட்சா (வீடியோ இணைப்பு)

இத்தாலியின் மிலன் பகுதியில் மிலன் 2015 கண்காட்சி நடைபெற்றது.

இதில் இத்தாலியை சேர்ந்த 80 சமையல் கலைஞர்கள் தங்களின் கடின உழைப்பினால் தயாரித்த 1,595 மீற்றர் நீளமுள்ள பீட்சாவை காட்சிக்கு வைத்திருந்தனர்.

இதை தயாரிப்பதற்கு ஆயிரத்து ஐநூறு கிலோ தக்காளி, ஒன்றரை டன் வெண்ணை மற்றும் பல லிட்டர் ஆலிவ் எண்ணை பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பீட்சாவை 800 மேஜைகளின் மேல் வைத்திருந்தனர். புகழ்பெற்ற மார்கெரிட்டா பீட்சா கண்டுபிடிக்கப்பட்டு 126 ஆண்டுகளாவதை முன்னிட்டு இந்த பிட்சாவை தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இறுதியில் 30,000 பார்வையாளர்களுக்கு இது பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்த பீட்சாவை தயாரித்ததான் மூலம் உலகில் நீளமான( 1,141 மீற்றர்) பீட்சாவை தயாரித்த ஸ்பெயினின் சாதனையை இத்தாலி முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை