இத்தாலி குடிமக்கள் ஏன் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்வதில்லை? பரிதாபமான பின்னணி

NEWSONEWS  NEWSONEWS
இத்தாலி குடிமக்கள் ஏன் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்வதில்லை? பரிதாபமான பின்னணி

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியின் வரலாற்றை பின்னோக்கி பார்த்தால், 1960ம் ஆண்டுகளில் இருந்த சராசரி பிறப்பு விகிதம் தற்போது பாதியாக குறைந்துள்ளது தெரியும்.

தற்போதைய இத்தாலியின் மக்கள் தொகை எண்ணிக்கையானது சுமார் 6 கோடியே 7 லட்சமாக இருக்கிறது.

இத்தாலியின் தேசிய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்ட தகவலில் இத்தாலியில் சராசரியாக ஆண்டிற்கு 5 லட்சத்திற்கும் குறைவாகவே புதிதாக குழந்தைகள் பிறக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 கோடியே 7 லட்சம் மக்கள் தொகையில், ஆண்டிற்கு 5 லட்சத்திற்கும் குறைவாக குழந்தைகள் பிறப்பதால், அந்நாட்டின் சராசரி பிறப்பு விகிதம் கிட்டத்தட்ட பூஜ்யத்திற்கு சென்றுவிட்டதாக தேசிய புள்ளியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், இத்தாலிய மக்கள் ஏன் குழந்தைகள் பெற்றுக்கொள்வதில் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு கிடைக்கும் பல பரிதாபமான பதில்கள் அந்த நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை கேள்வி குறியாக்குகிறது.

ரோம் நகரை சேர்ந்த சில்வியா என்ற 40 வயது பெண் இதுபற்றி கூறுகையில், குழந்தைகள் அதிக அளவில் பெற்றுக்கொள்ளாததற்கு மிக முக்கிய காரணம், பணம் தான். நம்மிடம் தேவையான பணம் இல்லாவிட்டால், இந்த உலகத்திற்குள் ஒரு புதிய உயிரை கொண்டுவருவது நம்முடைய முட்டாள் தனத்தையே காட்டும்.

நம்மிடம் பணம் இருக்கிறதா இல்லையா என்பதில் இந்த நாட்டு அரசுக்கு எந்த அக்கறையும் கிடையாது.

இதில் அரசு எந்த வகையிலும் உதவியும் செய்யாது என்று கூறிய அவர், தன்னுடைய மகள் ஜேர்மனி மற்றும் இங்கிலாந்தில் பணியாற்றியதாகவும் அந்த நாடுகளுக்கு செல்லும் வெளிநாட்டு நபர்களுக்கு அந்த அரசுகள் சிறப்பாக ஆதரவு அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த நாடுகளில் நமக்கு ஒரு வேலை இருந்தால், தங்கும் வசதி முதற்கொண்டு அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்துக்கொள்ளலாம்.

ஆனால், இத்தாலியில் உள்ள நகரங்களில் ஒரு வீட்டில் குடியேற நினைத்தால் அதிக அளவிலான வாடகையை செலுத்த வேண்டும். வாடகையையே செலுத்த இயலாதபோது குழந்தையை மட்டும் எப்படி பெற்றுக்கொள்ள முடியும் என சில்வியா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் குழந்தைகளை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் இல்லாமல் பெரும்பாலான மக்கள் கூட்டுக்குடும்பங்களாகவே வசித்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

Marzia என்ற இளம்பெண் கூறுகையில், பெண்கள் தங்களுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள பணம் தேவைப்படுகிறது என்பதால், நிறைய பெண்கள் பணி செய்வதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.

வேலை மற்றும் எதிர்காலத்தை பற்றியே பெண்கள் கனவு காண்பதால், அவர்களால் இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியவில்லை என்றார்.

Debora என்ற கடை உரிமையாளர் கூறுகையில், இத்தாலியில் 20 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களை பார்ப்பதே மிகவும் அரிது.

பெண்கள் முதலில் தங்களுக்கென ஒரு நிலையான வாழ்க்கையை உருவாக்கி கொண்ட பிறகு தான், மிக தாமதமாகவே குழந்தை பெற்றுக்கொள்வதை பற்றி சிந்திக்கிறார்கள் என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்த மக்கள் தொகை மற்றும் சமூகக் கொள்கைகள் ஆராய்ச்சி நிறுவன அதிகாரியான Giuseppe Gesano, பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசு அனைத்து வகையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

தற்போது அரசு புதிதாக குழந்தை பெற்றுக்கொள்ளும் குடும்பங்களுக்கு மாதம் தோறும் 80 யூரோக்கள் 3 வருடங்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கி வருகிறது.

பிற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில், தாங்கள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க குறிப்பிடத்தக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கருத்து தெரிவித்துள்ளார்.

மூலக்கதை