பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு ; 4 போலீசார் பலி

  தினத்தந்தி
பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு ; 4 போலீசார் பலி

லாகூர்,பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், கிளர்ச்சிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது பொதுமக்கள், பாதுகாப்புப்படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் பனு மாவட்டம் லகி மார்வாட் , மண்டன் ஆகிய 2 பகுதிகளில் போலீசாரை குறிவைத்து மர்ம நபர்கள் இன்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 4 போலீசார் உயிரிழந்தனர்.

மூலக்கதை