‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்

  தினத்தந்தி
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது  ராஜ்நாத் சிங்

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கடந்த 1923-ம் ஆண்டு மகாராணா பூபால் சிங்கால் தொடங்கப்பட்ட பூபால் நோபில்ஸ் பல்கலைக்கழகத்தின் 104-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;- “இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது. இன்றைய இந்தியா அதன் மரபுகளை மதிக்கிறது, அதன் வளமான கலாச்சார பாரம்பரியத்தை மதிக்கிறது. இந்திய நிலம் சரகா, சுஷ்ருதா, ஆர்யபட்டா, பிரம்மகுப்தா, மாதவா, பாணினி, பதஞ்சலி, நாகார்ஜுனர், பிங்கலா, மைத்ரேயி, கார்கி மற்றும் திருவள்ளுவர் போன்ற அறிஞர்களை பெற்றெடுத்துள்ளது. இந்த கல்வி நிறுவனத்திற்கு மகாராணா பூபால் சிங்கின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மகாராணா பூபால் சிங் வெறும் ஆட்சியாளர் மட்டுமல்ல, தொலைநோக்கு பார்வை கொண்ட கல்வியாளர் மற்றும் அர்ப்பணிப்புள்ள தேசபக்தர். மகாராணா பூபால் சித்தூரில் இந்து பல்கலைக்கழகம், உதய்பூரில் ஒரு விவசாயக் கல்லூரி போன்ற நிறுவனங்களையும், பெண்கள் கல்விக்காக அர்ப்பணிக்கப்பட்ட பல பள்ளிகளையும் நிறுவியுள்ளார்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை