அநீதி ஆட்சியாளர்களை விரட்டுவதற்கான துணிச்சலை வீரமங்கை வழங்கட்டும்: அன்புமணி புகழாரம்
சென்னை, வீரமங்கை வேலுநாச்சியாரின் 296-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பல்வேறு அரசியல் தலைவர்கள் வேலுநாச்சியாருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்த நிலையில், வேலுநாச்சியாருக்கு புகழாரம் சூட்டி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் கூறப்பட்டு இருப்பதாவது; ”இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனை வீரமங்கை வேலுநாச்சியாரின் 296-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வீரமங்கையை வணங்கி மகிழ்கிறேன். வீரம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் வீரமங்கை வேலுநாச்சியார். ஆங்கிலேயர்கள் சூழ்ச்சியால் சிவகங்கை சீமையையும், கணவர் முத்து வடுகநாதரையும் வீழ்த்திய பிறகு பல பகுதிகளுக்கு சென்று ஹைதர் அலியின் படை உதவி பெற்று, மருது சகோதரர்களின் துணையுடன் 1780-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டு சிவகங்கை சீமையை கைப்பற்றினார். தமது ஆட்சிக் காலத்தில் சிவகங்கை மக்களுக்கு பொற்கால ஆட்சி வழங்கினார். அநீதியான ஆட்சியை எவ்வாறு வீழ்த்த வேண்டும் என்பதற்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை சிறந்த பாடம். ஆங்கிலேயர் ஆட்சியை வீழ்த்துவதற்காக பயன்படுத்திய துணிச்சலையும், வீரத்தையும் தமிழ்நாட்டு மக்களுக்கு வீரமங்கை வழங்கட்டும்.” இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
