வெனிசுலா மீதான தாக்குதல்; அமெரிக்க மக்கள் இதை விரும்பவில்லை - கமலா ஹாரிஸ்
வாஷிங்டன், வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் நகரில் நேற்று அதிகாலை 2 மணியளவில் சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வெனிசுலா நாட்டின் அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “வெனிசுலா மீது அமெரிக்கா வெற்றிகரமான தாக்குதலை நடத்தியது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவியும் சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க சட்ட அமலாக்கத்துறையுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” என்று தெரிவித்திருந்தார். மேலும், வெனிசுலா நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த நிலையில், வெனிசுலா மீதான இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “வெனிசுலாவில் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட நடவடிக்கைகள் அமெரிக்காவை பாதுகாப்பானதாகவோ, வலிமையானதாகவோ மாற்றவில்லை. மதுரோ ஒரு கொடூரமான சர்வாதிகாரி என்பதால் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் விவேகமற்றது என்ற உண்மை மாறிவிடாது. இந்த காட்சிகளை நாம் முன்பே பார்த்திருக்கிறோம். ஆட்சி மாற்றத்திற்காக அல்லது எண்ணெய்க்காக நடத்தப்படும் போர்கள் குழப்பமாக மாறும். அமெரிக்க குடும்பங்கள் அதற்கான விலையை செலுத்த வேண்டியிருக்கும். அமெரிக்க மக்கள் இதை விரும்பவில்லை. அவர்கள் பொய்களைக் கேட்டு சோர்வடைந்துள்ளனர். இது போதைப்பொருள் அல்லது ஜனநாயகம் பற்றியது அல்ல. இது எண்ணெய் மற்றும் பிராந்திய வலிமையை நிரூபிக்க விரும்பும் டொனால்டு டிரம்ப் பற்றியது. போதைப்பொருள் அல்லது ஜனநாயகம் பற்றி டிரம்ப் அக்கறை கொண்டிருந்தால், ஒரு போதைப்பொருள் கடத்தல்காரரை மன்னிக்கவோ அல்லது மதுரோவின் கூட்டாளிகளுடன் ஒப்பந்தங்களை தொடர்ந்து கொண்டு, வெனிசுலாவின் நியாயமான எதிர்ப்பை ஒதுக்கி வைக்க மாட்டார். அதிபர் டிரம்ப் ராணுவ படைகளை ஆபத்தில் ஆழ்த்துகிறார், கோடிகளை செலவிடுகிறார், ஒரு பிராந்தியத்தை சீர்குலைக்கிறார். உழைக்கும் குடும்பங்களுக்கான செலவுகளைக் குறைத்தல், சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்துதல், கூட்டணிகளை வலுப்படுத்துதல் மற்றும் - மிக முக்கியமாக - அமெரிக்க மக்களை முதன்மைப்படுத்துதல் ஆகியவற்றை முன்னுரிமைப்படுத்தும் தலைமை அமெரிக்காவிற்குத் தேவை.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். Donald Trump’s actions in Venezuela do not make America safer, stronger, or more affordable.That Maduro is a brutal, illegitimate dictator does not change the fact that this action was both unlawful and unwise. We’ve seen this movie before. Wars for regime change or oil that…




மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? - தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் விளக்கம்
தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது: செல்வப்பெருந்தகை
அநீதி ஆட்சியாளர்களை விரட்டுவதற்கான துணிச்சலை வீரமங்கை வழங்கட்டும்: அன்புமணி புகழாரம்
உதகை மலை ரெயில் சேவை 2-வது நாளாக ரத்து
மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
