கேம்பியா: அகதிகளை ஏற்றி சென்ற படகு விபத்தில் சிக்கி 7 பேர் பலி; பலர் மாயம்

  தினத்தந்தி
கேம்பியா: அகதிகளை ஏற்றி சென்ற படகு விபத்தில் சிக்கி 7 பேர் பலி; பலர் மாயம்

பஞ்சுல், மேற்கு ஆப்பிரிக்காவின் சில நாடுகள், கேம்பியா மற்றும் செனகல் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகள் ஒவ்வோர் ஆண்டும், வேலை தேடியும், சிறந்த வாழ்க்கைக்காகவும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, கடல் வழியே சட்டவிரோத வகையில் படகுகளில் புலம்பெயர்ந்து செல்வது வழக்கம். அப்போது, இயற்கை பேரிடர்கள், பலத்த காற்று மற்றும் கடல் அலைகளால் சிக்கி பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில், 200-க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றி கொண்டு படகு ஒன்று கடலில் சென்றுள்ளது. அப்போது அது திடீரென விபத்தில் சிக்கியது. இதில், 7 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. 10 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. 96 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பலரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் மணல்திட்டு ஒன்றின் அருகே, விபத்தில் சிக்கி கவிழ்ந்த படகு கண்டறியப்பட்டது. படகில் சென்றவர்கள் ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களாக இருக்க கூடும் என நம்பப்படுகிறது.

மூலக்கதை