அமெரிக்கா: மலையில் மோதிய ஹெலிகாப்டர்-4 பேர் பலியான சோகம்
வாஷிங்டன், அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில், 4 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 4 பேரும் உயிரிழந்தனர். மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து தொடர்பாக அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாக அமைப்பு விசாரணை மேற்கொண்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விபத்து நடைபெற்ற பகுதி வழியாக விமான போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் பைலட்டைத் தவிர, ஏனைய மூன்று பேரும் 30 வயதுக்குட்பட்ட பெண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை இழந்து துயரத்தில் உள்ள குடும்பத்தினருக்கு மனத் தைரியம் அளிக்க இறைவனை வேண்டிக் கொள்வதாக அந்த மாநில ஷெரிப் தெரிவித்துள்ளார்.




மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? - தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் விளக்கம்
தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது: செல்வப்பெருந்தகை
அநீதி ஆட்சியாளர்களை விரட்டுவதற்கான துணிச்சலை வீரமங்கை வழங்கட்டும்: அன்புமணி புகழாரம்
உதகை மலை ரெயில் சேவை 2-வது நாளாக ரத்து
மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
