5வது டி20 போட்டி: இந்தியா - இலங்கை அணிகள் இன்று மோதல்

  தினத்தந்தி
5வது டி20 போட்டி: இந்தியா  இலங்கை அணிகள் இன்று மோதல்

திருவனந்தபுரம்,இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 4 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 5வது டி20 போட்டி இன்று திருவானந்தபுரத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் வென்று தொடரை முழுமையாக கைப்பற்ற இந்தியா தீவிரம் காட்டும்.இலங்கை அணியை பொறுத்தவரை ஆறுதல் வெற்றியோடு தாயகம் திரும்ப முயற்சிக்கும்.

மூலக்கதை