பெண்கள் ஆக்கி: பெங்கால் டைகர்ஸ் வெற்றி

  தினத்தந்தி
பெண்கள் ஆக்கி: பெங்கால் டைகர்ஸ் வெற்றி

ராஞ்சி, 4 அணிகள் இடையிலான பெண்களுக்கான 2-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் ஷிராச்சி பெங்கால் டைகர்ஸ் - சூர்மா ஆக்கி கிளப் அணிகள் மோதின.பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பெங்கால் டைகர்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் சூர்மா ஆக்கி கிளப்பை வீழ்த்தியது. பெங்கால் வீராங்கனை அகஸ்டினா கோர்ஸிலேனி 11-வது நிமிடத்தில் அடித்த கோல் அடித்தார்.

மூலக்கதை