விஜய் ஹசாரே கோப்பை: ரெயில்வேஸ் அணிக்கு எதிராக விளையாடும் விராட் கோலி

  தினத்தந்தி
விஜய் ஹசாரே கோப்பை: ரெயில்வேஸ் அணிக்கு எதிராக விளையாடும் விராட் கோலி

மும்பை,33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது.இதில் டெல்லி அணிக்காக இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி விளையாடினார். 2 போட்டிகளில் விளையாடிய அவர் முதல் போட்டியில் சதம், 2வது போட்டியில் அரைசதம் அடித்து டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.ஆனால் நேற்று நடந்த 3-வது போட்டியில் சவுராஷ்டிரா அணிக்கு எதிராக அவர் விளையாடவில்லை.இந்த நிலையில் விராட் கோலி மேலும் ஒரு ஆட்டத்தில் விளையாட முடிவு செய்துள்ளார். வரும் 11-ந்தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு தயாராகும் பொருட்டு, விஜய் ஹசாரேயில் 6-ந்தேதி நடக்கும் ரெயில்வேக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாட இருப்பதாக டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் ரோகன் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை