"சாதியோடு என்னை அடையாளப்படுத்தாதீர்கள்..." - மேடையில் ஆவேசப்பட்ட மாரி செல்வராஜ்

  தினத்தந்தி
சாதியோடு என்னை அடையாளப்படுத்தாதீர்கள்...  மேடையில் ஆவேசப்பட்ட மாரி செல்வராஜ்

விருதுநகர் ,விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த பாராட்டு விழாவில் பேசிய இயக்குனர் மாரிசெல்வராஜ், சாதி ஒழியுமா என்று தனக்குத் தெரியாது என்றும் அதே நேரத்தில் தான் சாதிக்கு எதிரானவன் என்றும் பேசியுள்ளார்.அவர் பேசுகையில், ’நான் அறத்தின் பக்கமே நிற்பேன், சாதியின் பக்கம் அல்ல. நீங்கள் யாராக இருந்தாலும், சாதியின் பக்கம் ஒருபோதும் நிற்க மாட்டேன். நான் அரசியலுக்கு வந்தாலும் சாதிக்கு எதிராகதான் செயல்டுவேனே தவிர சாதியோடு ஐக்கிய படுத்திக்கொள்ள மாட்டேன் . நான் மானுடத்துக்காக செயல்பட விரும்புகிறேன். சாதியோடு என்னை அடையாளப்படுத்தாதீர்கள். சாதி ஒழியுமா என்று எனக்குத் தெரியாது, அதே நேரத்தில் நான் ஜாதிக்கு எதிரானவன்’ என்றார். மாரி செல்வராஜ் கடைசியாக பைசன் படத்தை இயக்கி இருந்தார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

மூலக்கதை