வைரலாகும் “தி ராஜா சாப்” படத்தின் 2-வது டிரெய்லர்

  தினத்தந்தி
வைரலாகும் “தி ராஜா சாப்” படத்தின் 2வது டிரெய்லர்

சென்னை,“தி ராஜா சாப்” படத்தின் 2-வது டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்திய அளவில் முன்னணி நடிகரான பிரபாஸ், தற்போது ’தி ராஜா சாப்’ படத்தில் நடித்துள்ளார். இந்த ஹாரர்-நகைச்சுவை திரைப்படத்தை மாருதி இயக்கியுள்ளார். பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர். சஞ்சய் தத், போமன் இரானி, ஜரினா வஹாப் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழில் ஜனவரி 10-ம் தேதி வெளியாகிறது. மற்ற மொழிகளில் 9-ம் தேதி வெளியாகிறது. இதற்கிடையில், ஏற்கனவே இப்படத்திலிருந்து டிரெய்லர் வெளியாகி கவனம் வெற்றநிலையில், தற்போது “தி ராஜா சாப்” 2.0 என்ற பெயரில் 2-வது டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.

மூலக்கதை