ஆடுகளம் எதிர்பார்த்த அளவுக்கு உதவவில்லை: ஸ்மித்
மெல்போர்ன்,ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது ஆஷஸ் டெஸ்ட் மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 152 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 110 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.இதையடுத்து 42 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்தது. இதனால், ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது.இரண்டே நாளில் போட்டி முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், இந்த போட்டியின் தோல்வி தொடர்பாக பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் கூறியதாவது,இங்கிலாந்து அணியினர் மிகவும் சிறப்பாக விளையாடினர். இது சவாலான ஒரு போட்டி. இன்னும் 50-60 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். நேற்று பந்து கொஞ்சம் மென்மையானதும் நாங்கள் நினைத்த மாதிரி அது செல்லவில்லை.அவர்கள் தொடக்கம் முதலே மிகவும் ஆக்ரோஷமாக ஆடியதால் பந்து மேலும் மென்மையாக மாறியது.அதிலிருந்து ஆடுகளம் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பந்து வீச்சாளர்களுக்கு பெரிய அளவில் உதவவில்லை என தெரிவித்தார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
உத்தரபிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது: காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தகவல்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட தொழிலாளி கொலை: கல்லூரி மாணவர் கைது
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
