செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்: சென்னை அணியை வாங்கிய பிரபல தயாரிப்பாளர்
செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில், சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பஞ்சாப் தி ஷெர் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி என்பதால், ஆண்டுதோறும் இதற்கான எதிர்பார்ப்பு, அதிகரித்து கொண்டு வருகிறது. சென்னை அணியின் கேப்டனாக ஆர்யா செயல்பட்டு வருகிறார். இதன் நிறுவனர் கங்கா பிரசாத். சென்னை அணியில் விஷ்ணு விஷால், ஜீவா, மிர்ச்சி சிவா, சாந்தனு, விக்ராந்த், பரத், பிரித்வி, அசோக் செல்வன், கலையரசன், ஆதவ் கண்ணதாசன், என்.ஜே. சத்யா, தாசரதி, ஷரவ் உட்பட பல முக்கிய நட்சத்திரங்கள் உள்ளனர். இந்நிலையில், சென்னை ரைனோஸ் என இருந்த அணியை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா வாங்கியுள்ளனர். மேலும் சென்னை அணியின் பெயரை வேல்ஸ் சென்னை கிங்ஸ் என பெயர் மாற்றப்படுவதாக ஐசரி கணேஷ் அறிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கேப்டன் ஆர்யா உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் கலந்து கொண்டனர்.It was a truly special and memorable moment for me.With great pride and emotion, we unveiled VELS Chennai Kings, Chennai’s team in the Celebrity Cricket League, a platform that beautifully brings together two passions that unite our people: cinema and cricket.Along with Mrs.… pic.twitter.com/6RopJTljvbசென்னை அணியின் விளம்பர துாதுவராக நடிகை மீனா நியமிக்கப்பட்டுள்ளார். சரத்குமார் அணியின் ஆலோசகராக இருக்கிறார்.இந்த அணியில் சிம்பு ஆடுகிறாரா என்பது குறித்து அறிவிப்பு இல்லை. செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடர் 2026 ஜனவரியில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
