“காந்தாரா” படத்தின் வசூல் சாதனையை முறியடித்த “துரந்தர்”
ஆதித்யா தார் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துரந்தர்’. 'தெய்வ திருமகள்' படத்தில் விக்ரமின் மகளாக நடித்து கவனம் ஈர்த்த சாரா அர்ஜுன் ‘துரந்தர்’ படத்தில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் மாதவன், சஞ்சய் தத், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால் உட்படப் பலர் நடித்திருக்கின்றனர். ஆதித்யா தார் இயக்கத்தில் இப்படம் கடந்த 5ம் தேதியன்று உலகம் முழுக்க வெளியானது. சாஸ்வத் சச்தேவ் இதற்கு இசையமைத்திருக்கிறார். ‘துரந்தர்’ படத்தில் ரன்வீர் சிங் இந்திய உளவாளியாக நடித்துள்ளார். ரன்வீர் ஜோடியாக நடிக்கும் சாரா, அங்குள்ள அரசியல் கட்சித்தலைவரின் வாரிசாக வருகிறார். அக்ஷய் கண்ணாவின் தீம் மியூசிக், நடனம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. துரந்தர்’ படம் இந்து - முஸ்லிம் பிரச்னை தூண்டுவதாக வெளியான விமர்சனத்தால் தங்கள் நாட்டில் வெளியிட 6 அரபு நாடுகள் தடை விதித்துள்ளன. பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா ஆகிய 6 அரபு நாடுகளில் ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ படம் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. துருந்தர் படத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அரபு நாடுகள் படத்தை வெளியிட தடை விதித்துள்ளன. இந்த நிலையில், ‘துரந்தர்’ படம் 17 நாட்களில் உலகளவில் ரூ. 870 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன்மூலம் ரூ. 855 கோடி வசூல் செய்த ‘காந்தாரா சாப்டர் 1’ சாதனையை துரந்தர் முறியடித்துள்ளது.Dhu...Ran...Dhar Revolution! Book your tickets. - https://t.co/cXj3M5DFbc#Dhurandhar Ruling Cinemas Worldwide.@RanveerOfficial #AkshayeKhanna @duttsanjay @ActorMadhavan @rampalarjun #SaraArjun @bolbedibol @AdityaDharFilms #JyotiDeshpande @LokeshDharB62 #JioStudios… pic.twitter.com/J1pzTqQDTy




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
