ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வெற்றி: டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன..?

  தினத்தந்தி
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வெற்றி: டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன..?

துபாய், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி நேற்று நிறைவடைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மறுபுறம் நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்தது. இதில் நியூசிலாந்து 323 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இதுவரை 6 போட்டிகளில் ஆடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலியா (100 சதவீதம்) முதலிடத்தில் தொடர்கிறது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து (77.78 சதவீதம்) சில புள்ளிகள் கூடுதலாக பெற்ற நிலையில் 3-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதன் காரணமாக 2-வது இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்கா (75.00 சதவீதம்) 3-வது இடத்திற்கு இறங்கியுள்ளது. இலங்கை அணி (66.67 சதவீதம்) 4-வது இடத்திலும், பாகிஸ்தான் (50.00 சதவீதம்) 5-வது இடத்திலும் மற்றும் இந்தியா (48.15 சதவீதம்) 6-வது இடத்திலும் உள்ளன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் தோல்வியடைந்த இங்கிலாந்து (27.08 சதவீதம்) சில புள்ளிகளை இழந்த நிலையில் 7-வது இடத்தில் உள்ளது. வங்காளதேசம் (16.67 சதவீதம்) 8-வது இடத்திலும் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் (4.17 சதவீதம்) கடைசி இடத்திலும் உள்ளன.A strong start to New Zealand's #WTC27 campaign More from the #NZvWI series https://t.co/1eslGLc9qx pic.twitter.com/jM91wt4WNL

மூலக்கதை