டி20 உலகக் கோப்பை: இந்திய அணியில் இவர்களுக்கு பதிலாக ஜெய்ஸ்வால், ஜிதேஷை.. - முன்னாள் வீரர் கருத்து
மும்பை, 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பிப்.7-ந் தேதி மும்பையில் மோதுகிறது. அடுத்த ஆட்டத்தில் நமீபியாவை பிப்.12-ந் தேதி டெல்லியில் சந்திக்கிறது. 3-வது ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை பிப்.15-ந் தேதி கொழும்பில் எதிர்கொள்கிறது. கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் பிப்.18-ந் தேதி ஆமதாபாத்தில் மோதுகிறது. இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவினர் கேப்டன் சூர்யகுமார், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து அணியை இறுதி செய்தனர். சூர்யகுமார் கேப்டனாகவும் அக்சர் படேல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய டி20 அணியின் துணை கேப்டனான சுப்மன் கில் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். முதன்மை விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படுள்ள நிலையில் பேக்கப் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஏறக்குறைய 2 வருட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பி இருக்கிறார். அத்துடன் ரிங்கு சிங் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். ஆனால் அந்த அணியில் ஜிதேஷ் சர்மா கழற்றி விடப்பட்டுள்ளது பேசு பொருளாகி உள்ளது. ஏனெனில் ஒரு ஆண்டு காலமாக இந்திய டி20 அணியில் விக்கெட் கீப்பர் மற்றும் பினிஷர் ரோலில் ஆடி வந்த அவர் உலகக் கோப்பை தொடரில் நிச்சயம் இடம்பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது பலரது மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதும் பலரது மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த அணியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் இஷான் கிஷனை நீக்கி விட்டு ஜெய்ஸ்வால் மற்றும் ஜிதேஷ் சர்மாவை சேர்க்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இஷான் & வாஷிக்கு பதிலாக நான் அவர்களை (ஜெய்ஸ்வால் மற்றும் ஜிதேஷ் சர்மா) சேர்த்திருப்பேன். அக்சர் துணை கேப்டனாக ஆக இருக்கிறார். அதனால் அவர் நிச்சயமாக விளையாடுவார். வருண் மற்றும் குல்தீப் இருக்கும்போது நீங்கள் வாஷியை விளையாட வைக்க முடியாது. ஜிதேஷ் நீக்கப்படுவதற்கு எந்த தவறும் செய்யவில்லை. யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பொறுத்தவரை அவர் ஏன் முதல் இடத்தில் இருக்கக்கூடாது என்பதை யாரும் விளக்கத் தேவையில்லை” என்று பதிவிட்டுள்ளார். டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல் (துணை கேப்டன்), ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
