ஐ.பி.எல். 2026: நமது அணி எப்படி இருக்கும்..? சிஎஸ்கே-வின் கேள்விக்கு அஸ்வின் பதில்

  தினத்தந்தி
ஐ.பி.எல். 2026: நமது அணி எப்படி இருக்கும்..? சிஎஸ்கேவின் கேள்விக்கு அஸ்வின் பதில்

சென்னை, 10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 26-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் கடந்த 16-ம் தேதி நடந்தது. இதில் 10 அணிகளின் நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு அணியினரும் தங்களிடம் இருந்த கையிருப்பு தொகைக்கு ஏற்ப குறிப்பிட்ட வீரரை குறி வைத்து பல்வேறு வியூகங்களுடன் வந்திருந்தனர். ஏலத்தை மும்பைச் சேர்ந்த மல்லிகா சாகர் நடத்தினார். ஏலத்தில் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) உள்நாட்டு வீரர்களுக்கு குறிவைத்தது. அந்த வகையில் சர்வதேச அனுபவம் இல்லாத உள்நாட்டு வீரர்களான இடக்கை சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் பிரஷாந்த் வீர், சிக்சர் அடிப்பதில் வல்லவரான கார்த்திக் சர்மா ஆகியோரை பெரிய தொகைக்கு வாங்கியது. மொத்தத்தில் சென்னை அணி தங்களுக்கு 9 வீரர்களை எடுத்தது. முன்னதாக சென்னை அணி 15 வீரர்களை தக்க வைத்திருந்தது. அதுபோக சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் வாங்கியது. தற்போது ஏலத்தில் 9 வீரர்களை வாங்கியுள்ளது. இதனையும் சேர்த்து சென்னை அணியில் மொத்தம் 25 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் அடுத்த ஐ.பி.எல். சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் 12 (இம்பேக்ட் வீரர் சேர்த்து) எப்படி இருக்கும்? என்று அந்த அணி நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தது. அந்த பதிவிற்கு இந்தியா மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் சென்னை அணியின் பிளேயிங் 12 குறித்து தனது கணிப்பினை பதிவிட்டுள்ளார். அந்த வகையில் அஸ்வின் தேர்வு செய்துள்ள சிஎஸ்கே அணியின் பிளேயிங் 12 பின்வருமாறு:- ஆயுஷ் மாத்ரே, சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஷிவம் துபே, பிரெவிஸ், பிரஷாந்த் வீர், மகேந்திரசிங் தோனி, அகீல் ஹொசைன் அல்லது மேட் ஹென்றி, கலீல் அகமது, நாதன் எல்லீஸ், நூர் அகமது.இம்பேக்ட் வீரர்: அன்ஷுல் கம்போஜ்/ கார்திக் சர்மா, ஷ்ரேயாஸ் கோபால்/ சர்பராஸ் கான்.AyushSanjuRutuDubeBrevisPrashantMSAkeal/Matt HenryKhaleelEllisNoorImpact: Anshul/Karthik Sharma/Shreyas Gopal/Sarfraz based on combination/situation https://t.co/hF04Qj9kZP

மூலக்கதை