சவாலான வேடங்களில் நடிக்கவே ஆசை - சோனியா அகர்வால்

  தினத்தந்தி
சவாலான வேடங்களில் நடிக்கவே ஆசை  சோனியா அகர்வால்

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக ஜொலித்த சோனியா அகர்வால் திடீரென சினிமாவில் இருந்து ஒதுங்கினார். தற்போது மீண்டும் அவர் நடிக்க வந்திருக்கிறார். கோதண்டம் தயாரித்து, ஏ.குரு எழுதி இயக்கியுள்ள 'பருத்தி' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சென்னையில் நடந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய சோனியா அகர்வால், "கிராமத்து அம்மா கதாபாத்திரத்தில் நடித்தது புதிய அனுபவம். இந்த படத்துக்காக முதன்முறையாக 'டார்க் மேக்கப்' போட்டு நடித்தேன். இந்த கதாபாத்திரத்துக்கு வேறு யாரையாவது தேர்வு செய்திருக்கலாமே என்று இயக்குனரிடம் கேட்டேன். உங்கள் முக பாவனைகள்தான் இதற்கு சரியாக 'செட்' ஆகும் என்றார். நல்ல கதாபாத்திரத்தை விட மனம் வரவில்லை. எனவேதான் 'இமேஜ்' பார்க்காமல் துணிந்து நடித்தேன். சவாலான வேடங்களில் நடிக்கவே ஆசையாக இருக்கிறேன். பேர் சொல்லும்படி இனி என் நடிப்பு இருக்கும்" என்று கூறினார்.

மூலக்கதை