3வது டெஸ்ட்; வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 462 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து
மவுன்ட் மாங்கானு, நியூசிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. நியூசிலாந்து அணியில் சிறப்பாக விளையாடி கான்வே 227 ரன்கள் , கேப்டன் டாம் லாதம் 137 ரன்கள் எடுத்தனர்.தொடர்ந்து விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 420 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் கவேம் ஹாட்ஜ் சதமடித்து 123 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 155 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சில் விளையாடிய நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது. டாம் லாதம் , கான்வே இருவரும் சதமடித்து அசத்தினர்.நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 462 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.462 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 4வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது. பிரண்டன் கிங் 37 ரன்களும், கேம்பெல் 2 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
