சற்று குறைந்த தங்கம் , வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
சென்னை, தங்கம் விலை மீண்டும் கட்டுக்கடங்காமல் ஏறத் தொடங்கியது. கடந்த 12-ந்தேதியில் இருந்து அதன் விலை தாறுமாறாக ஏற்றம் கண்டது. கடந்த 11-ந்தேதி ஒரு சவரன் ரூ.96,400 என்று இருந்த நிலையில், 12-ந்தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்து 960-க்கு விற்பனை ஆனது. இதன் தொடர்ச்சியாக கடந்த 15-ந்தேதி மட்டும் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்றது. இதன் மூலம் தங்கம் இமாலய உச்சத்தை தொட்டது. அதற்கு மறுநாள் விலை சற்று குறைந்து மீண்டும் ஏறுமுகத்தில் இருக்கிறது. இதேபோல் வெள்ளி விலையும், தாறுமாறாக எகிறி வருவதை பார்க்க முடிகிறது. வெள்ளியின் தேவை அதிகரித்து இருப்பதால் அதன் விலை கட்டுக்கடங்காமல் உயருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம், வெள்ளி விலை உயர்ந்து இருந்தது. தங்கத்தை பொறுத்தவரையில், நேற்று கிராமுக்கு ரூ.40-ம், கிராமுக்கு ரூ.320-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 440-க்கும், ஒரு சவரன் ரூ.99 ஆயிரத்து 520-க்கும் விற்பனை ஆனது. வெள்ளியை எடுத்துக்கொண்டால் நேற்று கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ.2 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.224-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 24 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் வெள்ளி விலை தொடர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்து வருகிறது. தங்கம் விலை இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,380-க்கும், சவரன் ரூ.99,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை வெள்ளி விலை வரலாறு காணாத வகையில் மேலும் உயர்ந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.221-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:- 19.12.2025- ஒரு சவரன் ரூ.99,040 18.12.2025- ஒரு சவரன் ரூ.99,520 17.12.2025- ஒரு சவரன் ரூ.99,200 16.12.2025- ஒரு சவரன் ரூ.98,800 15.12.2025- ஒரு சவரன் ரூ.1,00,120 14.12.2025- ஒரு சவரன் ரூ.98,960 13.12.2025- ஒரு சவரன் ரூ.98,960 12.12.2025- ஒரு சவரன் ரூ.98,960 11.12.2025- ஒரு சவரன் ரூ.96,400 10.12.2025- ஒரு சவரன் ரூ.96,240




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
