நக்சலைட்டுகள் சுட்டதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி

  தினத்தந்தி
நக்சலைட்டுகள் சுட்டதில் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் பலி

சத்தீஷ்கார் மாநிலம் ராஜநந்தகான் மாவட்டத்தின் போர்தலவ் பகுதியில் உள்ள காட்டில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மத்திய ரிசர்வ் போலீசார் உள்ளூர் போலீசாருடன் இணைந்து நக்சலைட்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதனையடுத்து உடனடியாக சக போலீசார் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதற்கிடையில் நக்சலைட்டுடனான துப்பாக்கிச் சண்டை தீவிரமாக நடந்து வருகிறது.

மூலக்கதை