ஐதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

  தினத்தந்தி
ஐதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், குறிப்பிட்ட நேரத்தில் அது வெடிக்கும் என்றும் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் மூலம் செய்தி வந்தது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் பயணிகள், அவர்களின் உடைமைகளை சோதித்தனர். மேலும் விமான நிலையம் முழுவதும் சோதனையிட்டதில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்காததால் அவை புரளி என தெரியவந்தது. எனினும் விமான நிலைய போலீசார் வழக்குப்பதிந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

மூலக்கதை