பா.ஜனதா- சிவசேனா மோதல்: அமித்ஷாவுடன் ஏக்நாத் ஷிண்டே சந்திப்பு

  தினத்தந்தி
பா.ஜனதா சிவசேனா மோதல்: அமித்ஷாவுடன் ஏக்நாத் ஷிண்டே சந்திப்பு

மும்பை, மராட்டியத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில், சமீபத்தில் சிவசேனாவை சேர்ந்த சிலர் பா.ஜனதாவில் இணைந்தனர். இதனால் பா.ஜனதா மீது அதிருப்தி காரணமாக நேற்று முன்தினம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் சிவசேனா மந்திரிகள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். துணை முதல்-மந்திரி ஷிண்டே மட்டும் கலந்துகொண்டார். இதையடுத்து மகாயுதி கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், ஏக்நாத் ஷிண்டே திடீரென நேற்று இரவு டெல்லிக்கு சென்று உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மகாயுதி கூட்டணிக்கு உள்ள சாதகமான சூழல் பற்றியும், கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றியும் ஆலோசனை செய்ததாக தெரிகிறது.

மூலக்கதை