வங்கிகளின் அதிகாரபூர்வ இணையதள முகவரி பிரத்யேக டொமைனுக்கு மாற்றம்
புதுடெல்லி,சமீப காலமாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் அதிகரித்து வரும் மோசடிகளை தடுக்கவும், ஆன்லைன் வங்கிச் சேவைகளில் வாடிக்கையாளர்களின் நிதித் தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்தியாவில் செயல்படும் அனைத்து வங்கிகளும் தங்களின் இணையதள முகவரியை '.bank.in' என்ற பிரத்யேக டொமைனுக்கு மாற்ற வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.டி.எப்.சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் '.bank.in' என முடியும் புதிய டொமைனுக்கு மாறியுள்ளன. (எடுத்துக்காட்டாக பாரத ஸ்டேட் வங்கி - https://sbi.bank.in) ஏன் இந்த மாற்றம்..? பாதுகாப்பு: '.bank.in' டொமைன் என்பது அரசு அனுமதியுடன் வழங்கப்படும் பாதுகாப்பான டொமைனாகும். இது வாடிக்கையாளர்களை பிஷிங் (phising) மற்றும் போலி வலைதளங்கள் போன்ற மோசடிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உதவும். வங்கிகள் மீது நம்பிக்கையை உருவாக்கும்: இதனால் வாடிக்கையாளர்கள் ஒரு வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தை எளிதாக அடையாளம் காண முடியும். உதாரணமாக - www.abc.com என்பதற்கு பதிலாக www.abc.bank.in என்பதைப் பார்க்கும்போது அது நம் வங்கிதான் என்ற பாதுகாப்பு உணர்வு மக்களிடையே உருவாகும். இணைய மோசடிகளை தடுக்கும் முயற்சி: இதன் மூலம் போலியான வலைதளங்களை வாடிக்கையாளர்கள் எளிதில் அடையாளம் காண முடியும். இந்த டொமைன் கட்டுப்பாடு மூலம் மோசடி வலைதளங்களை தடுக்க முடியும்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரிங்கு ஹூடா
