வாக்காளர் பட்டியல் திருத்த பணிச்சுமை: வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை

  தினத்தந்தி
வாக்காளர் பட்டியல் திருத்த பணிச்சுமை: வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை

கொல்கத்தா,தேர்தல் விரைவில் நடைபெற உள்ள தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட பல்வேறு அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தை சேர்ந்தவர் சாந்திமோனி ஏஹா. அங்கன்வாடி ஊழியரான இவர் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், கடந்த சில ஒரு வார காலமாக வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி மேற்கொண்டு வந்த சாந்திமோனி கடுமையான பணிச்சுமையால் உடல், மனரீதியாக அவதிப்பட்டு வந்தார். அவர் இன்று தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், சாந்திமோனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, வாக்குச்சாவடி நிலை அலுவலராக செயல்பட்டு வந்த அங்கன்வாடி ஊழியர் தற்கொலை செய்துகொண்டு வந்த சம்பவத்தில் தேர்தல் ஆணையத்திற்கு மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா கண்டனம் தெரிவித்துள்ளார். ஊழியர்களுக்கு அதிக அளவிலான பணிச்சுமையை தேர்தல் ஆணையம் வழங்குவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மூலக்கதை