‘கோவைக்கு மெட்ரோ ரெயில் வராது என்று கூறுவது பொய் பிரசாரம்’ - தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசம்

  தினத்தந்தி
‘கோவைக்கு மெட்ரோ ரெயில் வராது என்று கூறுவது பொய் பிரசாரம்’  தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசம்

கோவை, சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “தமிழக மக்களின் கோரிக்கையை பிரதமர் மோடியிடம் நேரடியாக சொல்லக் கூடிய வாய்ப்பு வரும்போது அதை முதல்-அமைச்சர் நிராகரிக்கிறார். தமிழக மக்களின் நலன்களை அவர் நிராகரிக்கிறார் என்று நேரடியாக குற்றம்சாட்டுகிறேன். பிரதமரை ஏன் அவர் சந்திக்க மறுக்கிறார்? பாரத பிரதமர் கோவைக்கு வருகிறார். அவர் கோவைக்கு வருவதற்கு முன்பாகவே, மெட்ரோ ரெயில் கோவைக்கு வராது என்று பொய் பிரசாரம் செய்து, தவறான அரசியலை செய்யும் ‘இந்தியா’ கூட்டணியை வன்மையாக கண்டிக்கிறேன். பொய் பிரசாரம் செய்தவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை