அஜித் தோவலுடன் வங்காளதேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு
டெல்லி, தலைநகர் டெல்லியில் இன்று 7வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்தியா, இலங்கை உள்பட பல்வேறு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனிடையே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாநாட்டில் பங்கேற்கும்படி வங்காளதேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரஹ்மானுக்கு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அழைப்பு விடுத்தார். இந்நிலையில், அஜித் தோவலின் அழைப்பை ஏற்று வங்காளதேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரஹ்மான் இன்று இந்தியா வந்தார். அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டின்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை வங்காளதேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் கடந்த சில மாதங்களாக விரிசல் நிலவி வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முன்னதாக வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில் அவருக்கு வங்காளதேச கோர்ட்டு மரண தண்டனை விதித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் அஜித் தோவலுடன் வங்காளதேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரஹ்மான் மேற்கொண்ட சந்திப்பு பேசுபொருளாகியுள்ளது.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரிங்கு ஹூடா
