‘தமிழ்நாட்டு மக்கள் வள்ளலாரின் கொள்கைகளுக்கு எதிராக வதைக்கப்படுகிறார்கள்' - அன்புமணி ராமதாஸ்

சென்னை, ஆன்மிகவாதியான வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் 202-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “கருணைக்கடலாக வாழ்ந்து ஒளியாக மறைந்த வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் 202-ஆம் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. எவருக்கும் எந்த தீமையும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று நினைத்தவர் அவர். எதிலும் பொது நோக்கம் வேண்டும், பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும், கொல்லாமை கூடாது ஆகியவற்றை போதித்ததுடன் அவற்றுக்கு இலக்கணமாக வாழ்ந்த வள்ளலாரை வணங்குகிறேன். ஆனால், இன்று தமிழ்நாட்டு மக்கள் அவரது கொள்கைகளுக்கு எதிராக வதைக்கப்படுகிறார்கள். அவர்கள் மீது வள்ளலார் தனிப்பெருங்கருணை காட்ட வேண்டும். வதைக்கும் நிர்வாகத்தில் இருந்து தமிழக மக்கள் மீட்கப்பட்டு மகிழ்ச்சியாக வாழ வள்ளலார் வகை செய்ய வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மூலக்கதை
