சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து

  தினத்தந்தி
சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து

விருதுநகர், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கோனம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பட்டாசு கடை ஒன்று இயங்கி வந்தது. இந்த கடையில் இன்று காலை வழக்கம் போல் பணியாளர்கள் பட்டாசுகளை விற்பணை செய்துகொடிருந்தனர். அப்போது திடீரென பட்டாசுகளை சேகரித்து வைத்திருந்த குடோனில் இருந்து புகை வெளியேறியது. இதனைக்கண்ட பணியாளர்கள் அலரியடித்துக்கொண்டு வெளியில் சென்றனர். இதனையடுத்து பட்டாசுகள் அடுத்தடுத்து வெடிக்க தொடங்கின. பின்னர் இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த நிலையில், பட்டாசு கடையில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த பட்டாசு கடையில் தொடர்ந்து அரை மணி நேரத்திற்கும் மேலாக பட்டாசுங்கள் வெடித்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

மூலக்கதை