பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; நாய் குறுக்கே வந்ததால் விபரீதம்

மதுரை, மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்தவர் சிமோல்ராய் (வயது 37). மேற்கு வங்காளத்தை சேர்ந்த இவர் கடந்த சில ஆண்டுகளாக பேரையூரில் குடியிருந்து ஹெர்பல் கிளினிக் நடத்தி வருகிறார். இவரது தாயார் கணன் ராய் (60). இந்த நிலையில் சிமோல்ராய் குடும்பத்தினர் திருச்சியில் இருந்து கார் ஒன்றில் பேரையூருக்கு வந்து கொண்டிருந்தனர். கார் திருமங்கலம்- ராஜபாளையம் சாலையில், டி.குன்னத்தூர் அருகே வந்த போது, சாலையின் குறுக்கே நாய் ஒன்று பாய்ந்தது. இதனால் திடீரென்று பிரேக் போட்டதில், கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கணன்ராய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சிமோல்ராய்க்கு படுகாயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். குடும்பத்தினர் உயிர் தப்பினார். இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மூலக்கதை
