திருப்பூர் - திருச்சி ரெயில் சேவையில் மாற்றம்

  தினத்தந்தி
திருப்பூர்  திருச்சி ரெயில் சேவையில் மாற்றம்

திருப்பூர், கரூர்-விரகாக்கியம் ரெயில் நிலையம் இடையே ரெயில்வே பால பணி நடைபெற உள்ளது. இதனால் நாளை (திங்கட்கிழமை) பாலக்காட்டில் இருந்து திருப்பூர் வழியாக திருச்சிக்கு காலை 6.30 மணிக்கு இயக்கப்படும் ரெயில் (வண்டி எண் 16844) கரூர் வரை மட்டும் இயக்கப்படுகிறது. இதேபோல் திருச்சியில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு பாலக்காட்டிற்கு இயக்கப்படும் ரெயில் (வண்டி எண் 16843) மாயனூர் வரை மட்டுமே இயக்கப்படும். மேலும் மாயனூரில் இருந்து முன்பதிவில்லாத பயணிகள் ரெயில் பாலக்காடு வரை இயக்கப்படும். மேற்கண்ட தகவலை, ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை