காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடல் - சென்னை கலெக்டர் அறிவிப்பு

சென்னை, சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2-ந்தேதி (வியாழக்கிழமை) தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 251எல் (ஏ) ஆகியவைகளின் கீழ், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (எப்.எல்.1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், எப்.எல்.2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், எப்.எல்.3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும் எப்.எல்.3 (ஏ), எப்.எல்.3 (ஏஏ) முதல் எப்.எல்.11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையகங்கள், மதுபான கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மூலக்கதை
