சென்னையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

  தினத்தந்தி
சென்னையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

சென்னை, சென்னையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் விபரம்; பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (30.09.2025) மணலி மண்டலம் (மண்டலம்-2), வார்டு-21ல் பாடசாலை தெருவில் உள்ள ஜெயம் மஹால், தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்-4), வார்டு-41ல் கொடுங்கையூர், மணலி சர்வீஸ் சாலை, மேம்பாலம் அடிவாரத்தில் உள்ள தொப்பை விநாயகர் கோயில், இராயபுரம் மண்டலம் (மண்டலம்-5), வார்டு-53ல் வால்டாக்ஸ் சாலை, கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் உள்ள சமுதாயக் கூடம், திரு.வி.க. நகர் மண்டலம் (மண்டலம்-6), வார்டு-68ல் பெரியார் நகரில் உள்ள திருவள்ளுவர் திருமண மண்டபம், அண்ணாநகர் மண்டலம் (மண்டலம்-8), வார்டு-106ல் அரும்பாக்கம், ரசாக் தோட்டம் பிரதான சாலையில் உள்ள முரளிகிருஷ்ணா திருமண மண்டபம், தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-120ல் இராயப்பேட்டை, லாயிட்ஸ் காலனியில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி ஐ.டி.ஐ. கல்லூரி, கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்–10) வார்டு-136ல் சாலிகிராமம், தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளி மைதானம், வளசரவாக்கம் மண்டலம் (மண்டலம்-11), வார்டு-153ல் போரூர், உதயா நகரில் உள்ள பி.ஜே.என் திருமண மண்டபம், அடையாறு மண்டலம் (மண்டலம்-13), வார்டு-176ல் வேளச்சேரி, ராம் நகர் 7வது பிரதான சாலையில் உள்ள காமராஜர் மாளிகை, பெருங்குடி மண்டலம் (மண்டலம்-14), வார்டு-191ல் ஜல்லடியன்பேட்டை, பாரதியார் சாலையில் உள்ள ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மூலக்கதை