விஜய் பேச ஆரம்பித்தபோது கரண்ட் கட், செருப்பு வீச்சு, போலீஸ் தடியடி நடத்துகிறது - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர், கரூர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- விஷச் சாராய மரணத்தின்போது முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்லாதது ஏன்? விஜய் பேச ஆரம்பித்தபோது விளக்குகள் அணைந்தன. செருப்பு வீசப்படுகிறது. காவல்துறை தடியடி நடத்துகிறது. விஜய் பேச ஆரம்பித்தபோது ஆளில்லாத ஆம்புலன்ஸ் வாகனம் எப்படி வந்தது? ஆம்புலன்ஸ்களை அரசால் தயார் செய்ய முடியாதா? இரவோடு இரவாக பிரேத பரிசோதனை நடந்தது. சாலையில் கூட்டம் நடத்தினால் ஆம்புலன்ஸ் வரும் என்கின்றனர். திமுக ஆகாயத்திலா கூட்டம் நடத்துகிறது? இறப்பில் அரசியல் செய்ய வேண்டாம் என்னும் மா.சுப்பிரமணியனுக்கு இது தெரியாதா? கூட்டத்திற்கு அனுமதி தரும்போது ஆம்புலன்ஸ் வர வழி இருக்கிறா என்பதை பார்க்க வேண்டும். விஜய் கூட்டத்தில் பதிவெண் இல்லாத ஆம்புலன்ஸ் வந்தது. அதைத்தான் பழனிசாமி கூறினார். 40 ஆம்புலன்ஸ் தயார் செய்து அதில் திமுக மருத்துவ அணி என அக்கட்சியினர் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். இரவோடு இரவு வருவதையும் நிவாரணம் தருவதையும் முதல்-அமைச்சர் பெருமையாக கூறுகிறார். இதை செய்வதற்காகத்தான அரசு உள்ளது. கரூர் சம்பவத்தின் உண்மைத் தன்மை தெரிய சிபிஐ விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மூலக்கதை
